500,000 ரூபா செலவில், தெழும்புகஹவத்தை Dream village (ட்ரீம் வில்லேஜ்) பாதை புனரமைப்புக்கு பிறகு மக்கள் பாவனைக்கு

“ஜனாதிபதி செயலகத்தினால் நேரடியாக ஒதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டின்” ஊடாக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் வகையில் நாட்டில் நடாத்தப்படும் வேலைத்திட்டங்களுக்கமைய ; #project08

எனது முயற்சி, மற்றும் வேண்டுகோளுக்கிணங்க “எட்டாவது கட்ட வேலைத்திட்டம்,

தெழும்புகஹவத்தை ஊர்மக்கள் மற்றும் நலன்விரும்பிகளது பூரண ஒத்துழைப்புடன் தெழும்புகஹவத்தை Dream village (ட்ரீம் வில்லேஜ்) பாதை சுமார் ஐந்து இலட்சம் 500,000 LKR ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டு (170 அடி கொங்றீட்) இடப்பட்டு புனரமைப்பு செய்து மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது.