"5,000,000 ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட ; அக்குறணை அஸ்ஹர் பாடசாலையின் புதிய A - Hall நிர்மாணப் பணியின், “பாதுகாப்புச் சுவருக்கான” அடிக்கல் நாட்டும் விழா!

ஜனாதிபதி செயலகத்தினால் நேரடியாக ஒதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டின்” ஊடாக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் வகையில் நாட்டில் நடாத்தப்படும் வேலைத்திட்டங்களுக்கமைய எனது முயற்சி மற்றும் வேண்டுகோளுக்கிணங்க, #project04

பாடசாலைகளின் வளங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நடைபெற்று வரும் வேலை திட்டத்தின் ; அக்குறணை பிராந்தியத்துக்கான நான்காம் கட்ட பாரிய வேலைத்திட்டமாக,

சுமார் 45 கோடி செலவிலான அஸ்ஹர் கல்லூரியின் A - Hall அமைப்பின் முதற்கட்டப் பணியாக “ரூபாய் 50 லட்சம் (05 Million) செலவிலான பாதுகாப்பு மதிலின் அடிக்கல் நாட்டுவிழா” கடந்த 16.07.2024 புதன்கிழமை இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் சிராஜ் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட SDC, OAU, A - Hall கட்டிட ஏற்பாட்டுக் குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள், ஜம்இய்யதுல் உலமா, மஸ்ஜித்கள் சம்மேளனம், மற்றும் பத்ரிய்யீன் நிர்வாகம் சார்பாகக் கலந்து கொண்டவர்கள், நலன்விரும்பிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.