"3,500,000 ரூபா செலவில் கசாவத்தை வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படும் அனைத்து வசதிகளும் கூடிய தொழில்நுட்ப்ப வகுப்பறை… (Digital Smart Clasroom)"

சிறுவர்களுக்குக் கல்வி புகட்டுவது மட்டுமல்லாமல் கல்வி கற்கக் கூடிய சரியான சுற்றுச் சூழலை உருவாக்கிக் கொடுப்பதும் எமது பொறுப்பாகும். #project07

பாடசாலைகளின் வளங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நடைபெற்று வரும் வேலை திட்டத்தின் அக்குறணை பிராந்தியத்துக்கான எழுமாவது கட்ட வேலைத்திட்டம்,

கசாவத்தை வித்தியாலயத்தின் வகுப்பறை பற்றாக்குறையை முன்னிறுத்தி ஊர் நலன்விரும்பிகளின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட கட்டட அபிவிருத்தி திட்டத்தில், ஊர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க 3,500,000 மதிப்பிற்குள் சகல தொழில்நுட்ப வசதிகளும் பொருந்திய "SMART" வகுப்பறையை கட்டியெழுப்பும் அபிவிருத்தி பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.

கசாவத்தை விவசாய சங்கத்தலைவர் அப்துல் அஸீஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் பாடசாலை அதிபர் உட்பட ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் இவ் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை மிகக் குறுகிய காலத்திற்குள் நிறைவுறச் செய்து இப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவ செல்வங்களுக்கு இந்த தொழிநுட்ப வகுப்பறையை உபயோகிக்க கூடிய சந்தர்பத்தை ஏற்படுத்தி தர முடியும் என எதிர்ப்பார்த்துள்ளோம்.

இதில் பைதூர் ஸகாத் தலைவர் கசாவத்தை ஷியாம் மௌலவி, கட்டட அமைப்பின் அங்கத்தினர், ஹுதா மஸ்ஜித் நிர்வாக சபை, பெற்றோர் மற்றும் ஊர் மக்களும் கலந்து கொண்டனர் .