1,000,000/- ரூபா செலவில், பங்கொல்லாமடை கல்கெடியாவ பாதை புனரமைப்புக்கு பிறகு மக்கள் பாவனைக்கு👉

“ஜனாதிபதி செயலகத்தினால் நேரடியாக ஒதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டின்” ஊடாக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் வகையில் நாட்டில் நடாத்தப்படும் வேலைத்திட்டங்களுக்கமைய ; #project05

எனது முயற்சி, மற்றும் வேண்டுகோளுக்கிணங்க அக்குறணை பிராந்தியத்துக்கான ஐந்தாவது கட்ட வேலைத்திட்டம், "பங்கொல்லாமடை ஜும்மா பள்ளிக்கு அருகாமையில் செல்லும் கல்கெடியாவ பாதையின் இரண்டாவது கட்ட வேலை சுமார் பத்து இலட்சம் 1,000,000 LKR ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டன.

சகோதரர் ஹில்மி ஹபீப் அவர்களது வேண்டுகோளுக்கிணங்க பங்கொல்லாமடை ஊர்மக்கள் மற்றும் நலன்விரும்பிகளது பூரண ஒத்துழைப்புடன் இந்த செயற்திட்டம் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.